மாவல்லிக்கேணியான்

தாளால் உலகம் அளந்த அசைவே கொல் ?
வாளா கிடந்தருளும், வாய் திறவான் - நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்;
ஐந்தலைவாய் நாகத்தணை.

(நான்முகன் திருவந்தாதி-35)

[பொருள்]

பெரிய கடல் அலைகள் வந்து மோதுகின்ற சிறப்பை உடைய திவ்ய தேசமான திருவல்லிக்கேணி. "மாமயிலை" என்று போற்றப்படும் சிறந்த மயிலாப்பூரை அடுத்துள்ளது. இந்த திவ்ய தேசத்தில் அரங்கநாதராக, ஆதிசேஷன் மேல் சயனத் திருக்கோலத்தில் திருமால் அருள் பாலிக்கிறார். திருமால் திரிவிக்ரம அவதாரம் செய்த பொழுது இரண்டு அடிகளால் உலகங்களை அளந்தார். அப்பொழுது ஏற்பட்ட ஆயாசம்(உடற்சோர்வு) போலும். அதனைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு திருவல்லிக்கேணியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று ஆழ்வார் பாடுகிறார். இந்த சயனம் அரங்கனுக்கு மிகவும் உகப்பாக இருக்கிறது. எவ்வளவு போகம் எனில், நாம் பேசினால் பதில் பேசும் எண்ணம் கூட இல்லை. ஆனால் வாய் திறவாமலே கிடந்தவாறே பக்தர்களுக்கு அருள் செய்கிறான்.

(சொற்பொருள்)

வாளா - மௌனமாய், அமைதியாய்
கிடந்த - படுத்திருக்கும் (கோலம்)
ஓதம் - அலை, கடல்
நீள் ஓதம் - பெரிய கடல் அலைகள்
அசைவு - சோர்வு
ஐந்தலை வாய் நாகம் - ஆதிசேஷன்
அணை - படுக்கை

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.