நாமம் சொல்லில் நமோ நாராயணமே

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 10

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி, எறிஞர் அரணழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை, உலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.
(பெரிய திருமொழி - 6.10.1)

[பொருள்]

ஆராவமுதனாய் திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருக்கும் உத்தமன்; வராக அவதாரம் செய்து பூமியை இடந்த உத்தமன்; எங்கள் இறைவன்; (இராவணன் முதலிய) கடிய மனம் படைத்த  அரக்கர்கள் கோட்டையாகத்  திகழ்ந்த இலங்கைக்கு,  கடல் கடந்துச்  சென்று அந்த அரக்கர்களை அழித்த உத்தமன்; திரிவிக்கிரம அவதாரம் செய்து இரண்டு அடிகளால் எல்லா உலகங்களையும் அளந்த உத்தமன். அந்த உத்தமனின் நாமம் என்னவென்று சொல்ல வேண்டுமெனில் அது "நமோ நாராயணா ! " என்பதாம்.

(சொற்பொருள்)

கேழல் - பன்றி
இடத்தல் - பெயர்த்தல்; குத்தி எடுத்தல்
கடியார் இலங்கை - கடிய மனம் படைத்த  அரக்கர்கள் வாழ்ந்த இலங்கை
அரண் - கோட்டை
எறிஞர் - பகைவர்
நம்பி - நற்குணங்கள் நிரம்பப் பெற்ற உத்தமன்;இறைவன்;சகல விதமான நற்குணங்களும் தன்னகத்தே கொண்ட பரிபூர்ணன்

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.