கண்ணபுரத்தென் கருமணியே !

அருளியவர்: குலசேகர ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்

பாசுர எண்: 719
பெருமாள் திருமொழி : 8

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவியிறு வாய்த்தவனே !
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் ! செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கண்ணபுரத்தென் கருமணியே !
என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ.
(பெருமாள் திருமொழி - 8.1)

மன்னு புகழ்க் கௌசலை தன் மணிவியிறு வாய்த்தவனே !

தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் ! செம்பொன்சேர்

கன்னி நன் மா மதிள் புடைசூழ் கண்ணபுரத்து என் கருமணியே !

என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ.

(பெருமாள் திருமொழி - 8.1)

mannu pugazh kausalai than maNi vayiRu vaaiththavane
then ilangai kOn mudigaL sindhuviththaai ! sempon Ser
kanni nan maa madhil pudai soozh kaNNapuraththu en karumaNiye !
ennudaiya innamudhe ! raagavane ! thaalelo.
(perumal thirumozhi - 8.1)

My dark-gem Lord of Kannapuram, surrounded by high stone walls inlaid with gold ! As Rama, you severed the heads of Lanka's king Ravana ! You are the jewel of the precious womb of the world famous Kousalya. Sleep, my sweet child Raghava, Talelo !

[பொருள்]

"சர்வேசுவரனை மகனாகப் பெற்றாள்" என்ற நிலைத்த புகழினைப் பெற்ற ஸ்ரீகௌசல்யாருடைய திருவயிற்றில் அவதாரம் செய்தவனே ! தெற்கே உள்ள இலங்கையின் தலைவனான இராவணனின் தலைகளை பாணங்களாலே சிதறச் செய்து, அவதார காரியத்தை முடித்தவனே ! சிறப்பான பொன்னால் வேயப்பட்ட, என்றும் பார்வைக்கு புதிதாகவும் அழகாகவும் உள்ள, பெரிய மதிள்களால் சூழப்பெற்ற திருக்கண்ணபுர திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள என் கண்மணியே ! என்றும் எனக்கு இனிமையான அமுதமான என் ஸ்ரீ ராமனே ! தாலேலோ !

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.