அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்

செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்

வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் ,

ஐயா ! அழேல் அழேல் , தாலேலோ ! அரங்கத்து அணையானே ! தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட

அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

கான்ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்

வான்ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்

தேன்ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் ,

கோனே ! அழேல் , அழேல் தாலேலோ ! குடந்தைக் கிடந்தானே ! தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலிற்சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும், அரையிற் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும், மோதிரமும் கிறியும் மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக, எங்கள் குடிக்கு அரசே ! ஆடுக செங்கீரை, ஏழ்உலகும் உடையாய் ! ஆடுக, ஆடுகவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும்

ஆமையும் ஆனவனே ! ஆயர்கள் நாயகனே!

என் அவலம் களைவாய் ! ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ! ஆடுக , ஆடுக என்று

அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு

ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்

இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் உலகில்

எண்திசையும் புகழ் மிக்கு இனபம் அது எய்துவரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப, மருங்கின் மேல்

ஆணிப் பொன்னாற் செய்த ஆய்பொன் உடை மணி

பேணி, பவளவாய் முத்து இலங்க, பண்டு

காணி கொண்ட கைகளால் சப்பாணி, கருங்குழற் குட்டனே ! சப்பாணி.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

பொன் - அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி தன் அரை ஆட , தனிச் சுட்டி தாழ்ந்து ஆட, என் அரை மேல் நின்றுஇழிந்து உங்கள் ஆயர்தம் மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி, மாயவனே ! கொட்டாய் சப்பாணி.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

பல்மணி முத்து இன்பவளம் பதித்தன்ன

என்மணிவண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல்

நின்மணிவாய் முத்து இலங்க , நின் அம்மை தன்

அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி, ஆழியங் கையனே ! சப்பாணி.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

தூ நிலமுற்றத்தே போந்து விளையாட

வான் நிலா அம்புலீ ! சந்திரா ! வா என்று

நீ நிலா, நின் புகழா நின்ற ஆயர்தம்

கோ நிலாவக், கொட்டாய் சப்பாணி , குடந்தைக் கிடந்தானே ! சப்பாணி.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து

அட்டி அமுக்கி அகம் புக்கு, அறியாமே,

சட்டித்தயிரும்தடாவினில் வெண்ணெயும் உண்

பட்டிக் கன்றே ! கொட்டாய் சப்பாணி, பற்பநாபா ! கொட்டாய் சப்பாணி.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.